நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சரஸ்வதி தேவி அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்நிலையில் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் கற்க முடியும். சரஸ்வதி தேவியை போற்றும் வகையில் “சகலகலாவல்லி மாலை” என்னும் நூலை குமரகுருபரர் இயற்றியுள்ளார்கள்.
சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் பலனாக ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் கலை திறன் முழுமையாக வெளிப்படும். குழந்தைகள் மந்திரத்தை கூறினால் அவர்களின் அறிவாற்றல் மேம்படும். சரஸ்வதி தேவியின் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுபவர்களுக்கு சிறந்த வாக்கு வன்மை உண்டாகும். அற்புதமான பேச்சாற்றல், சிறந்த கல்வி ஞானம் கிடைக்க பெறுவார்கள். இந்த மந்திரத்தை கூறினால் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.