வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 2022 – 2023 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..