Categories
மாநில செய்திகள்

நவம்பர் 30 முதல் மீண்டும்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி முடிய வேண்டிய கலந்தாய்வு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |