நவம்பர் 1ஆம் தேதியன்று மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை சற்று குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 1 முதல் 8வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மழலையர் நர்சரி பள்ளிகள், மற்றும் அங்கன்வாடி மையங்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பினால் நர்சரி பள்ளிகளில் மாணவர்களின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மழலையர், நர்சரி பள்ளிகள் நவம்பர் ஒன்றாம் தேதி திறக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் அமைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப் போவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.