தெற்கு ரயில்வே மண்டலம் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் இயக்கப்பட்ட சிறப்பு அனைத்து ரயில்கள் அனைத்தும் நவம்பர் மாதம் முதல் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றானது தீவிரமடைந்தது. அதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
அதை எடுத்து தற்போது இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக சிறப்பு ரயில்களாக இயக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அனைத்தும் நவம்பர் மாதத்திலிருந்து வழக்கமான ரயில் சேவைகளாக இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பற்றி தெற்கு ரயில்வே மண்டலம் மூத்த அதிகாரி கூறியிருப்பது என்னவென்றால், நாடு முழுவதும் கொரோனா தொற்று முதல் அலையில் 47 ரயில்வே பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்ததை அடுத்து இரண்டாவது அலையின் போது பெரும்பாலோனார் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இதை அடுத்து நவம்பர் மாதம் முதல் வழக்கமான பெயர்களில் ரயில் சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இவற்றிற்கான பணிகளில் ரயில்வே அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தேவையில்லாத ரயில்நிலையத்தில் தேவையில்லாத இடங்களில் சிக்னல் பிரச்சனையால் நிற்பதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.