Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமல்… 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏர் சுவிதா என்ற இணையத்தில் கொரோணா பரிசோதனைக்கு பதிவு செய்யலாம்.

Categories

Tech |