Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் 13 வயது சிறுமியை கழிவறைக்குள் வைத்து…. உச்சகட்ட கொடூர சம்பவம்….!!!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம்மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டிற்கு அருகே உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சிறுமியை கழிவறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. பிறகு நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.அந்த புகாரி அடிப்படையில் தப்பி ஓடிய ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரவில் கழிவறைக்குச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |