Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வலி…. கணவனின் உதவியுடன்….. ஆட்டோவில் பிரசவம்…. தாய் சேய் நலம்….!!

கோவையில் இளம்பெண் ஒருவருக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியை அடுத்த ராக்கி பாளையம் ஏரியாவை சேர்ந்த கௌதம். இவரது மனைவி ஜோதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கௌதம் அவரது நண்பன் உதவியுடன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு துடியலூர் நோக்கி
வேகமாக சென்றனர்.

அப்போது ஜோதிக்கு பிரசவ வலி அதிகரிக்க ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி பின் கணவரின் உதவியுடன் ஜோதிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து தாயையும், குழந்தையையும் விரைவாக தனியார் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அனுமதிக்க, நர்சுகள் திடீரென குழந்தையுடன் ஒருவர் வருவதைக் கண்டு பதற்றம் அடைந்து பின் நடந்தவற்றை கேட்டு அறிந்ததும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக துடியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |