கோவிலில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகிலுள்ள தோளுர் கிராமத்தில் பூலார் உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்றுள்ளனர்.
அந்த உண்டியலில் ரூபாய் 15,000 இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தோளுர் கிராம தலைவர் பூமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.