ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை பூசாரி தோட்டத்தில் கட்டிட காண்ட்ராக்டரான மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தகர கொட்டகையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான இந்திரங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ்(22), வசந்த்(26), பாஸ்கர்(25) ஆகிய 3 பேரும் கட்டுமான இயந்திரங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கட்டுமான இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.