Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பிடித்த காட்டுத்தீ…. பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

ஒண்டிவீரன் கோவில் மலைப்பகுதியில் தீடிரென காட்டுத்தீ பிடித்து மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை கிராமம் அருகே ஒண்டி வீரன் சுவாமி கோவில் மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவி காட்டுத்தீயாக மாறியது.

மேலும் நள்ளிரவு சமயத்தில் தீ பற்றியதால் யாரும் அதை கவனிக்கவில்லை. இதனைதொடர்ந்து  மறுநாள் காலையில் வனப்பகுதியில் தீ எரிவதை பார்த்து  அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வனத்துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுபடுத்தியுள்ளனர்.

Categories

Tech |