Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு…. 8 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி…. வெளியான பகீர் பின்னணி…!!!!

கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் பிரதாபன். இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய மனைவி, மூத்த மகன், மருமகள் மற்றும் 8மாத பேத்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரதாபன் வீட்டில் இன்று அதிகாலை 1.45 மணி அளவில் அதிகளவில் புகை வெளியேறி உள்ளது. இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து விட்டு, பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தீ எரிந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பிரதாபன், அவருடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் 8 மாத குழந்தை என அனைவரும் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மின்கசிவு ஏதேனும் இருக்குமா? என்று பிரேத பரிசோதனை செய்ததில் எந்த வாய்ப்பும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் வீடு தீப்பற்றியதை அறிந்த தெரிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த போது வீட்டின் பக்கத்தில் இருந்து 5 பைக்குகள் வேகமாக சென்றதாக நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறியுள்ளனர். எனவே இது கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |