தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க கட்சி ஆம்பூரில் 14-ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழருவி என்பவரை அறிவித்துள்ள நிலையில் அவர் திடீரென தி.மு.கவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடப்பு மாதத்தின் 19ஆம் தேதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க சார்பாக ஆம்பூரில் 14-ஆவது வார்டு வேட்பாளராக போட்டியிடுவதற்கு அக்கட்சி தமிழருவி என்பவரை அறிவித்துள்ளது.
ஆனால் அவர் அதே வார்டில் தன்னை எதிர்த்து போட்டியிடும் நகர செயலாளரான ஆறுமுகம் என்பவரின் தலைமையில் நேற்று இரவு 11 மணியளவில் தி.மு.க கட்சியுடன் இணைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.