சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் டிரைவர் கண்டக்டர் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நான்கு பேர் பேருந்தை உடனடியாக எடுங்க என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து புறப்பட நேரம் இருக்கிறது என டிரைவர் கூறியதால் நான்கு பேரும் தகராறு செய்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட மற்ற பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் போதையில் வந்த 4 பேரையும் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்த கும்பல் அருணாச்சலம் என்ற கண்டக்டரை தாக்கி விட்டு அங்கிருந்து தம்பி ஓடியது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு பேருந்துகளை இயக்க மாட்டோம் என கூறி டிரைவரும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட திருவண்ணாமலை சேர்ந்த பிரகாஷ், செல்வா, மணி, ஜாக்கி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.