நாயை சுட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசைல்பைல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவப்பா என்பவர் வளர்த்து வந்த நாய் வெங்கடேஷை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ் துப்பாக்கியால் அந்த நாயை சுட்டு கொன்றார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.