Categories
சற்றுமுன் செய்திகள்

நள்ளிரவிற்குள் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை… நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான ரூபாய் 20 ஆயிரம் கோடி இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டதிற்கு  பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தன.இந்த  பரபரப்பான சூழலுக்கிடையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது  மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும்  பங்கேற்றனர்.இதில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை குறித்தான முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 4375 கோடியை உடனே வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் மத்திய அரசானது தற்பொழுது பரபரப்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதாவது,மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான ரூபாய் 20 ஆயிரம் கோடி இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |