Categories
இந்திய சினிமா சினிமா

நல்ல வேளை தங்கச்சியா வரல…. அவங்க கூட டூயட் பாடணும்…. ஆசையை போட்டு உடைத்த சிரஞ்சீவி….!!

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து உருவாகியிருக்கும் படம் “லவ் ஸ்டோரி” இந்த படத்தை சேகர் கம்முலா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்த போது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் “போலா ஷங்கர் படத்தில் நல்லவேளையாக சாய்பல்லவி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. நான் அவருடன் டூயட் பாடவே ஆசைப்படுகிறேன் சாய்பல்லவிக்கு அண்ணனாக நடிப்பதற்கு எனக்கு சிறிதும் விருப்பமில்லை” என்று வேடிக்கையாக கூறியுள்ளார். சிரஞ்சீவிக்கு தங்கையாக போலா ஷங்கர் படத்தில் நடிப்பதற்கு சாய்பல்லவி தான் முதலில் படக்குழு கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |