Categories
உலக செய்திகள்

நல்ல முடிவு தான்..! பிரெக்சிட் வேண்டவே வேண்டாம்… ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம் …!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது தான் சரி என்று பிரெக்சிட்டுக்கு ஆதரவு அளித்த மக்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தபடுவது தாமதமாகி வருகிறது. எனவே ஐரோப்பிய ஆணையம் இது போன்ற விமர்சனங்களால் கடும் குழப்பம் அடைந்துள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்ததால் ஏற்கனவே கோபம் அடைந்திருக்கும் தலைவர்கள் பிரிட்டனுக்கு சரியான நேரங்களில் தடுப்பூசிகள் கிடைப்பதால் மேலும் எரிச்சலடைந்த்துள்ளார்கள்.

இந்நிலையில் தங்களுக்கு தடுப்பூசி தாமதமாவதால் ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் ஆதங்கத்தை பிரிட்டனில் இருக்கும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் மீது காட்டுகிறார்கள். அதாவது ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மட்டும் தடுப்பூசி அளிக்க தவறுகிறது. எனவே இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய சுகாதார ஆணையரான ஸ்டெல்லா கூறியுள்ளார். இவ்வாறான குழப்பங்களுக்கு இடையில் ப்ரெக்சிட்டிற்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் மக்கள் இதுபோன்ற செயல்பாடுகளால் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது சரியான முடிவுதான் என்று கூறிவருகிறார்கள்.

Categories

Tech |