உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது. அந்த தேதிக்கும் நேரத்திற்கும் இணையவாசிகள் விளக்கம் தருகின்றனர். 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் 14ம் தேதியே அமைச்சராவதாகவும், காலை 9.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதால் 9.30க்கு பதவியேற்பதாகவும் சொல்கின்றனர்.