விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் சந்தையில் வாரம் தோறும் உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் விலை 2900க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 2950 விற்பனைக்கு வருகின்றது. அதேபோல் நல்லெண்ணெய் 15 கிலோ விலை ஆனது கடந்த வாரம் 5280 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 165 ரூபாய் உயர்த்தப்பட்டு 5,445க்கு விற்பனை ஆகி வருகின்றது.
இருப்பினும் பருப்பு விலை குறைந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஏற்கனவே சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழலில் திடீரென நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.