விஜய் சாரை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகை அதிதி சங்கர் தெரிவித்துள்ளார்..
கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.. இந்த படம் அறிமுக நடிகை அதிதி சங்கருக்கு மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் அதிதி சங்கர் நடித்து, நடனத்திலும் பட்டையை கிளப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிதி சங்கர் அடுத்த கட்டமாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் மாடர்ன் ரோலில் நடிக்க இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து மீடியாக்களுக்கு அவர் பேட்டியளித்து வருகிறார்.. சமீபத்தில் தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தனக்கு பிடித்த கலைஞர்கள் என்று தெரிவித்துள்ள அதிதி சங்கர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நான் விரைவில் அவருடன் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை அதிதி சங்கர் அண்மையில் அளித்த பேட்டியில், நடிகை விஜயுடன் நடிப்பது குறித்து பேசி உள்ளார்.. விஜய் சாரை தனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும். அவர் மிகச்சிறப்பாக நடனம் ஆடுவார்.. எனவே அவருடன் நடனம் ஆடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.