Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் பேசிகிட்டே இருந்தாரு…. திடீர்னு இப்படி பண்ணிட்டாரு…. கடிதத்தில் அம்பலமான உண்மை….!!!!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் அருகே முகநூலில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ச்சூர் மாவட்டம், கானதால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ் நாயக். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து சாந்தாவின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் பீமேஷ் நாயக் மற்றும் சாந்தாவை அழைத்து வந்த போலீசார் சமாதானம் பேசி சாந்தாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

தனக்கு திருமணமாகி விட்டதால் தன்னுடன் அனுப்பும்படி கேட்டுக் கொண்டும், போலீசார் மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த பீமேஷ் நாயக் நேற்று முகநூல் வீடியோவில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அவரது அறையில் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் தான் வேறு ஜாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், தன்னுடன் சேர்ந்து வாழ வைக்காமல் காதலியை பிரித்து அவரது பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |