வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இரும்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள பேருந்து நிலையம், காலேஜ் முகம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொல்லன் பட்டறை அமைத்து அறிவால், கடப்பாரை, கோடாரி, கலப்பை கூர் முனை, குத்தாலம் உள்ளிட்ட இரும்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் தயாரித்த பொருட்களை விவசாயிகளுக்கு 150 ரூபாய் முதல் 1,000ரூபாய் வரை பொருளின் எடையைப் பொறுத்து விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து வடமாநில தொழிலார்கள் கூறும் போது நாங்கள் பரம்பரை பரம்பரையாக பட்டரை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் தற்போது பாரம்பரிய தொழில் நலிவடைந்து விட்டது என அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.