கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ஜெயராமன் என்ற மகன் உள்ளார். கடந்து சில ஆண்டுகளாக ஜெயராமனும் 23 வயது உடைய நர்சும் நட்பாக பழகி வந்தனர். பிறகு ஜெயராமன் நர்சை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி புதுப்பேட்டை பகுதிக்கு நர்சை அழைத்துச் சென்ற ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். பின்னர் ஜெயராமன் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்து கடலூருக்கு அழைத்து வந்து உன்னை பிடிக்கவில்லை என கூறிவிட்டு சென்றார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நர்ஸ் கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயராமனுக்கு அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, சகோதரி ஜெயஸ்ரீ ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.