தூக்க பாதிப்பினால் தவித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஜமுக்கோலி பகுதியில் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஒடிசாவின் பாலாங்கீர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த குனி ஹன்கார் என்னும் மாணவி தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுதி அறையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறையில் மாணவி கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அதில் தூக்க பாதிப்பினால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றேன். எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் அதன் உண்மை தன்மை பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு மாணவியின் குடும்ப உறுப்பினர்களை விடுதி அதிகாரிகள் தொடர்பு கொண்டு சில நாட்களாக குனி மன அழுத்தத்துடன் காணப்படுகிறார். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் சில நாட்கள் உங்களுடன் வசிக்கட்டும் என தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் ஒரு சில இரவுகளில் குனி தூங்காமல் விடுதியில் அலைந்து திரிந்தபடி காணப்பட்டு இருக்கின்றார். அதனால் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய குற்ற ஆவணங்கள் வாரியத்தின் அறிக்கையின்படி 2020 ஆம் வருடம் மொத்தம் 5546 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து இருக்கின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை 2021 ஆம் வருடத்தில் 5,551 ஆக இருந்தது. இந்த நிலையில் இது முந்தைய வருடத்தை விட இரண்டு சதவீதம் அதிகமாகும் நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.