Categories
பல்சுவை

நரை முடி பிரச்சனையா?…. “வீட்டிலுள்ள இந்த ஒரு பொருள் போதும்”….. வெள்ளை முடியை அடியோடு அழிச்சிடலாம்….!!!!

நரைமுடி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை இதை செய்து வந்தாலே போதும். நரைமுடி தொல்லை இனி இருக்கவே இருக்காது.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி ஏற்பட்டு விடுகின்றது. இந்த நரை முடியால் பலரும் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அதை மறைப்பதற்கு ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது முடியை மேலும் சேதப்படுத்துகிறது. இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளது. அது என்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

வீட்டு வைத்தியம்;

முதலில் ஒரு தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் பேஸ்ட் செய்து தலையில் தடவி வந்தால் முடியின் வெண்மை மறையும். அடுத்து இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து பின்னர் அந்த தண்ணீரை வைத்து தலை முடியை கழுவ வேண்டும். இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் . ஊறவைத்த வெந்தயத்தை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் வெள்ளைமுடி பிரச்சினை தீரும். இது முடி உதிர்வு பிரச்சனையை தடுப்பதற்கும் மிகவும் பயன் அளிக்கின்றது.

வெந்தயத்தை அரைத்து பொடியாக தயார் செய்து பின்னர் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவினால் இளமையிலேயே வரும் வெள்ளைமுடி பிரச்சனையை தீர்த்துவிட முடியும். வெந்தயத்தை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து அதை தலையில் தடவி வந்தால் முடி வெள்ளையாக மாறுவது மட்டுமல்லாமல் முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையும் நீங்கும்.

Categories

Tech |