Categories
மாநில செய்திகள்

நரிக்குறவ பெண்கள் 9 பேரை…. தரையில் அமர்த்தி உணவு…. தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட்..!!

அன்னதானம் வழங்கியதில் பாரபட்சம் காட்டிய மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று நரிக்குறவ பெண்ணை தரையில் அமர்த்தி உணவு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று நரிக்குறவ பெண்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து சாப்பிட்டார். இதற்கிடையே ஒரு நரிக்குறவ பெண்ணின் வீட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் அனைவரும் சமம் என்ற முறையில் உணவும் சாப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ் பாலாஜி மீண்டும் கடந்த வாரம் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மீண்டும் அதே போன்று நரிக்குறவ பெண்கள் 9 பேரை தரையில் அமர்த்தி பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. அதாவது, மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் நரிக்குறவர்கள் 9 பேரை தரையில் உட்கார வைத்தும், மற்றவர்களுக்கு மேஜையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு தற்போது அங்கு துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, அன்னதான திட்ட பொறுப்பு  சமையலர் குமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமையலர் குமாரிக்கு பதிலாக சந்தானம் என்பவரை நியமித்து, அவர் தான் பணிகளை தொடர்வார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |