Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர் குடியிருப்பில் முதல்வர் ஸ்டாலின்….. ட்ரெண்டிங் ஆகும் “அப்பா”(ஸ்டாலின்)….. !!!!

சென்னை ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது ஊசிமணி, பாசி மணி மாலைகள் அணிவித்து நரிக்குறவர் இன மாணவிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவி இல்லத்தில் தேனீர் அருந்திய ஸ்டாலின், பின்னர் அவர்கள் கொடுத்து இட்லி, வடையுடன் சிற்றுண்டி உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த நரிக்குறவர் மாணவி ஒருவருக்கு ஸ்டாலின் இட்லியை ஊட்டி விட்டார்.

இந்நிலையில் அங்கு முதல்வருக்கு மாணவிகள் வரவேற்பு அளித்த பாதகை வைரலாகி வருகிறது. அதில், “தான் கீழே இருந்தாலும், நம்மை மேலே தாங்கும் உறவு அப்பா (ஸ்டாலின்)”என குறிப்பிட்டு உதயசூரியன் சின்னத்துடன் ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஓவியம் வைரலாகி வருகிறது.

Categories

Tech |