தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி நரம்பு தளர்ச்சி மற்றும் மூட்டு வலிக்கு எளிய பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் இலையை நீர்விட்டு கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து அருந்தலாம். அதனால் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நரம்பு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும். மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஆகியவை உடலை விட்டு ஓடும். இதனை வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம்.