இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பிற்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முயன்று வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அவர், இனி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன். படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் கூறியுள்ளார். இதனால், தற்போது ஐஸ்வர்யா ராஜேஸ் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களையே தேர்வு செய்து வருகிறாராம்.