நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் போட்டர் இன் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிலையில் நயன்தாரா -விக்னேஷ் திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திருமண விழாவிற்கான புரோமோ படப்பிடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று நடத்தியுள்ளார்.
இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், அஜித், விஜய் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் முன்னேற்பாடுகள் அனைத்தும் கச்சிதமாக திட்டமிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.