இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ள விவகாரம் பிரச்சினையாக மாறிய நிலையில் இவர் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வகையில் 9 என்ற எண் நயன்தாராவின் சென்டிமென்ட் என்பது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் ஒன்றாகும். நயன்தாராவின் பிறந்தநாள் (நவ.18: 1+8=9), விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் (செப்.: 1+8=9), அவரது திருமண நாள் (ஜூலை 9) என அனைத்திலும் ‘9’ இருக்கிறது.இப்படியிருக்க, அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தியை அறிவித்ததும் அக்டோபர் 9ஆம் தேதி. இனி எந்த 9ஆம் தேதியாக இருந்தாலும், நயன்தாராவிடம் இருந்து ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் போல.