Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுடன் ஒப்பிடப்பட்ட ஜான்வி கபூர்…. பேட்டியில் கருத்து….!!!!!

நடிகை ஜான்வி கபூர் நயன்தாராவுடன் ஒப்பிட்டதால் பேட்டி ஒன்றில் சூடாகியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குட்லக் செர்ரி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருக்கின்றார். இதனால் ஜான்வி கபூரை நயன்தாராவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அண்மையில் பேட்டி அளித்த ஜான்வி கபூர் கூறியுள்ளதாவது, தான் சினிமாவில் நடிக்க வந்ததிலிருந்து தனது அம்மா மறைந்த நடிகை ஸ்ரீதேவி உள்பட மற்றவர்களுடன் தான் ஒப்பிடப்பட்டதாகவும் அதற்கு தான் கவலைப்படவில்லை என கூறியுள்ளார்.

எனது அம்மா ஸ்ரீதேவி எல்லா காலத்திலும் சிறந்த நடிகை என்று தான் நினைப்பதாகவும் இது போன்ற ஒப்பீடு விஷயத்தில் இருந்து தான் விலகியே இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் குட் லக் ஜெர்ரி படம் அசல் திரைப்படத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. ஜெர்ரி கதாபாத்திரம் நயன்தாராவின் கதாபாத்திரம் போல் இருக்காது. தங்களின் படம் வட இந்தியாவை அடிப்படை கொண்டு உருவாக்கப்படுவதால் பஞ்சாபில் உள்ள ஒரு பீஹாரி பெண்ணாகத் தான் நடிப்பதாகவும் அவளுடைய ஆளுமை, அவள் பேசும் விதம், குணாதிசயம் எல்லாமே வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |