தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதாவது நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொடுத்த வாடகை தாய் யார் என்பதை அவரும் அவரது கணவரும் இதுவரை ரகசியமாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த ரகசியம் மெதுவாக கசிய தொடங்கியுள்ளது. அதாவது நயன்தாராவிற்கு வாடகை தாயாக உதவி செய்தவர் கேரளாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் அவரது கல்லூரி தோழிகள் சிலரின் உதவியுடன் தான் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். மேலும் அந்தப் பெண் நயன்தாராவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் நயன்தாராவிடம் விசாரணை மேற்கொண்ட பின் வாடகை தாயான அந்த பெண்ணிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.