நயன்தாராவால் குழந்தை பெத்து தர முடியாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து தற்போது லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் அது தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கின்றார்.
இதனிடையே பாலிவுட் நடிகைகளை போல் நயன்தாராவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது, நயன்தாராவுக்கு வயதாகி விட்டது. அதனால் அவரால் குழந்தை பெத்துக்க முடியாது. இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்ற நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்ப மாட்டார். அதனால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார் என கூறியுள்ளார்.