Categories
சினிமா

நயன்தாராக்கும், விக்னேஷ் சிவனுக்கும்…. விரைவில் ‘டும் டும் டும்’…. தேதி கூட குறிச்சாச்சு?….!!!

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்டால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை நடிகை நயன்தாரா உறுதி செய்திருந்தார். இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக இருவரும் துபாய் சென்று அங்கு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில் “2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி யாரெல்லாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்..? நான் அந்த தேதியை வீணடிக்க விரும்பவில்லை என கூறியிருந்தார்.”இதன்மூலம் அந்த தேதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்தாராவை விரைவில் மணக்கோலத்தில் பார்க்கலாம் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |