Categories
சினிமா தமிழ் சினிமா

நயனை கரம் பிடித்த விக்கி…. மனைவி வந்த நேரம்…. “விக்கிக்கு அடித்த ஜாக்பாட்”….!!!!!

நயனை திருமணம் செய்த விக்னேஷ் சிவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த 29ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக் கொடுக்க  திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பல்வேறு நடிகர்களும் மற்றும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

திருமணத்துக்கு பின் கேரளாவுக்கு சென்ற இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றார்கள். இவர்கள் தற்பொழுது இருவரும் அவரவர்களின் வேலைகளை ஈடுபட்டு வருகின்ற நிலையில் விக்கிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அது என்ன வென்றால், 44ஆவது சர்வதேச ஜெஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை விக்னேஷ்சிவனும் நயன்தாராவும் நடத்தித் தர விருப்பம் தெரிவித்தனர். தற்போது தொடக்க விழாவை விக்னேஷ் சிவன் நடத்தி தர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதை அறிந்த ரசிகர்கள் மனைவி வந்த நேரம்…. என விக்கிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Categories

Tech |