மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நயன்தாரா “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பணியாற்றிய போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் கூறியதாவது, “உண்மையில் நம் வாழ்வை பெண்கள்தான் உருவாக்குகின்றனர். நமது வாழ்க்கைக்கும் நாம் செய்யும் செயலுக்கும் அர்த்தம் தருபவர்கள் பெண்கள்தான். இன்று மட்டுமல்ல எல்லா நாளும் பெண்கள் தினம் தான். ஆதலால் பெண்கள் இருக்கும் இடத்தை அழகாக மாற்றுவோம். தைரியமான, அழகான, அற்புதமான மற்றும் வலிமையான பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.