நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய விக்னேஷ் சிவன்.
அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படமான ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்ற உள்ளவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது.
அதன்படி அஜித்துக்கு 105 கோடி எனவும் நயன்தாராவுக்கு 10 கோடி எனவும் அனிருத்துக்கு 5 கோடியும் சம்பளமாக பேசப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் தனக்கு சம்பளமாக 10 கோடி கொடுக்க வேண்டும் என லைகா நிறுவனத்தின் கேட்டிருக்கின்றார். விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படம் கட்டாயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தனது சம்பளத்தை உயர்த்திருக்கின்றார் விக்னேஷ் சிவன்.