நயனுக்கு விக்கிக்கும் உள்ள வயது வித்தியாசத்தை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் அதிகம் கூகுளில் தேடி தேடி பார்த்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக நயன்தாரா சிம்புவை காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது. அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் விக்னேஷ்சிவனை காதலித்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கூகுளில் அதிகம் நயனுக்கும் விக்கிக்கும் உள்ள வயது வித்தியாசம் தான் தேடப்பட்டிருக்கின்றது. நயன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர். நயன்தாரா 1984ஆம் வருடம் நவம்பர் 18ஆம் தேதி பிறந்தவர். விக்னேஷ் சிவன் 1985ஆம் வருடம் செப்டம்பர் 18ஆம் தேதி பிறந்தவர்.