நயனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்து உருகியுள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அண்மையில் பார்சிலோனா தெரு வீதிகளிலும் சந்துக்களிலும் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்பொழுது நயன்தாரா லெவன்சியா வீதிகளில் குட்டி டிரவுசரில் வலம் வரும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அப்பபுகைப்படங்களுக்கு நீ என் உலக அழகியே…. உன்னை போல் ஒருத்தி இல்லையே…. என் உலக அழகியும், என் உலகத்தின் அழகும்…. மாடர்ன் ஸ்பேனிஷ் கட்டமைப்பு அழகான இந்திய பெண்ணுடன் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றது என கேப்ஷன் கொடுத்திருக்கின்றார். இவரின் இந்த பதிவிற்கு தற்பொழுது லைக்குகள் குவிந்து வருகின்றது.
https://www.instagram.com/p/ChivaiNII1L/?utm_source=ig_embed&ig_rid=7fa2ca13-9e43-45f4-b271-322bd010d680