Categories
ஆன்மிகம் இந்து

நம் வீட்டில் உள்ள பூஜை அறையை… எப்படி பராமரிக்க வேண்டும்…? கட்டாயம் தெரிஞ்சு வெச்சுக்கோங்க…!!!

பூஜை அறையை நாம் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பூஜையறையில் விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாக அணையும் வரை விடக்கூடாது. பூஜை முடிந்த பிறகு சிறிது நேரம் கழித்து பூக்கள் கொண்டு விளக்கைக் குளிர வைக்க வேண்டும். பூஜை செய்த பிறகு மறுநாள் காய்ந்து போன அந்த மலர்களை வீணாக்காமல் அதை காயவைத்து சீகக்காய் உடன் சேர்த்து நாம் பயன்படுத்தலாம். வியாழக்கிழமை பூஜை பொருட்களை எடுத்து தேய்த்து சுத்தம் செய்த பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு திரிபோட்டு வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றவேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை கழுவுதல் கூடாது. ஆனி இல்லாத படங்களுக்கு பூ வைக்க வேண்டுமென்றால் பால்பாயிண்ட் பேனா மூடியை சாமிபடத்தின் பின்பக்கமாக ஒட்ட வைத்து அதில் பூக்களின் காம்பை செருகி வைக்கலாம். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பூஜை அறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டி வைப்பது பார்ப்பதற்கு அழகாகவும், பராமரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

வீட்டில் கட்டாயம் குலதெய்வம் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். விளக்கெண்ணெயும், நெய்யும் கலந்து தீபம் ஏற்றினால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். நீங்கள் வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பையும், மற்றொரு கிண்ணத்தில் தண்ணீரையும் ஊற்றி பூஜை அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். நாம் திரும்பி வரும்வரை தெய்வங்களுக்கு அவையே பிரசாதமாக இருக்கும்.

Categories

Tech |