Categories
அரசியல்

நம்ம வெற்றியை உறுதி பண்ண…. இதுல ரொம்ப உஷாரா இருங்க…. ஒபிஎஸ்-இபிஎஸ் கொடுத்த ஐடியா…!!!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற 22ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் நமது கட்சி முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வாக்கு எண்ணும் நாளன்று முகவர்கள் அனைவரும் அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே சென்றுவிட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களில் முறையாக சீல் வைக்கப்பட்டுள்ளதா.? என கவனிக்க வேண்டும்.

அதோடு பதிவான வாக்குகலும் எண்ணிக்கையில் காண்பிக்கப்படும் வாக்குகள் சம அளவில் உள்ளனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் வாக்காளர்கள் பெற்றுள்ள வாக்குகளை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை இறுதியில் தேர்தல் அதிகாரியிடம் காண்பித்து சரி பார்க்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் ஏதாவது தில்லுமுல்லு செய்ய முற்பட்டாலோ அல்லது ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தாலோ அதனை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |