Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நம்ம மதுரைலயா…!! முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தம்…. பணம் கேட்டு மிரட்டல்…

பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம்  தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து பேசுவதும். அவருடன் வெளியில் சுற்றுவதும்.

ஒன்றாக புகைப்படம் எடுப்பதும் தொடர்ந்து வந்துள்ளது. இப்படி சில நாட்கள் காதலர்களாக சுற்றி திரிந்து உள்ளனர். இதனிடையே கண்ணனின் நடவடிக்கையில் மாற்றங்களை உணர்ந்த அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து மட்டுமின்றி அவரிடமிருந்து விலகியும் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த கண்ணன் பேஸ்புக்கில் போலியான ஒரு ஐடி உருவாக்கி அதில் இவர்கள் இருவரும் எடுத்த புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்யும் மணமகனுக்கும் புகைப்படங்களை எல்லாம் அனுப்பியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் இதுகுறித்து பெண் வீட்டாரிடம் விசாரித்தது மட்டுமில்லாமல் நடைபெறவிருக்கும் திருமணத்தையும் நிறுத்தியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான பெண் வீட்டார் முன்னாள் காதலன் கண்ணனிடம் கேட்டதற்கு அப்பெண்ணின் தந்தை தன்னிடம் பேசுமாறு கூறியிருந்தார். இதையடுத்து அப்பெண்ணின் தந்தையும் அவரிடம் பேசியுள்ளார். அதில் கண்ணன் ஆதாரங்கள் அனைத்தையும் வெளியிடாமல் இருப்பதற்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை நீக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிடம் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெய்ஹின்புரம் காவல் ஆய்வாளர் சேதுமணி தலைமையிலான தனிப்படை அமைத்து. புகார் குறித்து விசாரித்து சைபர் க்ரைம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரின் உதவியுடன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மதுரையில் தங்கியிருந்த கண்ணனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |