Categories
தேசிய செய்திகள்

நம்மாலும் முடியும்…. நம்பிக்கை நட்சத்திரமான தாராவி…. WHO பாராட்டு….!!

கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரம் மும்பை தாராவி என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தற்போது 6 வது கட்ட நிலையை எட்டிய போதிலும், கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சமயத்தில், இதைத் தவிர இந்தியாவின் பிற மாநிலப் பகுதிகளிலும் பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க இந்தியாவிலேயே மிகப்பெரிய சேரி மும்பையில் அமைந்திருக்கக் கூடிய தாராவி பகுதி தான். கொரோனா பாதிப்பு ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக இருந்தது இந்த தாராவியில் தான். தாராவியை பொருத்தவரை நாம் அனைவருக்குமே தெரியும் சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து வீடுகளும் மிக நெருக்கமாக ஒருவர் நடந்து சென்றால் மற்றொருவர் அதே பாதையில் அவருக்குப் பின்னால் தான் செல்ல முடியுமே தவிர அவரை கிராஸ் செய்து கூட செல்ல முடியாது.

அந்த அளவிற்கு நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பகுதி. அங்கே சமூக இடைவெளி கடைபிடிப்பது என்பது அரிதான ஒன்று. அப்பகுதி தற்போது கொரோனா பாதிப்பே இல்லாத நிலைக்கு மாறியது அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் உலக சுகாதார நிறுவனமும் எப்போதும் அதிகமான மக்கள் கூட்டத்துடன் காணப்படும் தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமெனில், நம்மாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியதோடு, கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரம் மும்பை தாராவி என்று கூறி பாராட்டியுள்ளது.

Categories

Tech |