Categories
கிரிக்கெட் விளையாட்டு

நம்ப தல தோனியா இது … புதிய புத்தர் லுக்கில்… வைரலாகும் புகைப்படம்…!!

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனான தோனியின் புதிய கெட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய தோற்றத்தை புதியதாக மாற்றிக்கொண்டு ,அந்தப் புதிய லுக்கில்  எடுக்கப்பட்ட போட்டோக்களை, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அவருடைய பல கெட்டப் லுக்ஸ்யும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படும். சமீபத்தில் தோனி வெளியிட்டுள்ள ஒரு புதிய லுக்கானது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் மொட்டை அடித்துக்கொண்டு, தாடியை சேவ் செய்து ,துறவி  ஆடையை அணிந்துகொண்டு ,சாந்த ஸ்வரூபமாக  அமர்ந்துள்ள புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ,அனைத்து ரசிகர்களும்  தோனியின் புதிய லுக்கை பகிர்ந்து வருகின்றனர். இந்த கெட்டப்பிற்கு ரசிகர்களிடையே உற்சாகமும், நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது . இது புதிய லுக்கில்  எடுக்கப்பட்ட புகைப்படமானது ,அடுத்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டியின்  விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது  என்று தெரிவித்தனர்.

Categories

Tech |