Categories
அரசியல் மாநில செய்திகள்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன விலை முதல்வரே”…? திமுகவை விளாசிய அண்ணாமலை…!!!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென்று கோரி நேற்று முதல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வாட் வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனை பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைந்திருந்த நிலையில், பல மாநிலங்கள் இன்னும் குறைக்கவில்லை. இதில் தமிழகமும் ஒன்று. இதனால் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்.

நேற்று போராட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: “திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை ரூபாய் 5-ம், டீசல் விலை ரூபாய் 4ம் குறைப்பதாக தெரிவித்திருந்தது. குறைந்தபட்சம் அதையாவது நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். அதையும் செய்ய மாட்டோம் என கூறினால், அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு என்ன விலை? நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன விலை? இவ்வளவு நாள் அவர்கள் பேசிய பேச்சுக்கு என்ன விலை? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |