2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லு ராஜு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.. நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம் என்று கூறினார். மேலும் பாஜகவினர் அதிமுக முடங்கி உள்ளதாக கூறி வருகிறார்கள்.
நாங்கள் கட்சியில் அனைவருமே ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக தான் இருக்கிறோம். பனங்காட்டு நரிகள் நாங்கள் எதற்குமே அஞ்ச மாட்டோம். நீங்கள் துரும்பைக் கொண்டு எறிந்தால் நாங்கள் தூணை கொண்டு எரிவோம் என்று கூறியுள்ளார்.