அதிமுகவில் நடைபெற்றுவரும் அதிகார பூசலில் யாருக்கும் செவிசாய்க்காமல் நடுநிலையாக இருந்து வருகின்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் அமைச்சர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் வீடுகளுக்கு அமைச்சர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.சில அமைச்சர்கள் பகிரங்கமாக தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த பிரச்சனை வலையில் சிக்காமல் லாவகமாக விலகி வருகின்றார்.
அமைச்சரின் கடமை சுகாதாரத்துறை அமைச்சராக தற்போது இருந்துவரும் விஜயபாஸ்கர் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டதிலிருந்து பம்பரம்போல் சுழன்று தன் பணியினை சிறப்பாக ஆற்றி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் அவரது பணி சார்ந்த விஷயங்களையும் துறை சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசுகின்றார்.அதைத் தவிர்த்து கட்சியில் நடக்கும் மற்ற விவகாரங்களை பற்றி விவாதிக்க மறுக்கின்றார்.
இது அரசியலப்பா பொதுவாக ‘இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை’ என்பது அனைவராலும் கூறப்பட்டு வரும் வசனம். அதேபோல் தான் அரசியலும் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதை நன்கு அறிந்து வைத்திருக்கும் விஜயபாஸ்கர் தற்பொழுது இருக்கும் அரசியல் சூழலில் யார் பக்கமும் சாயாமல் தன் வழியில் சென்று கொண்டிருக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் கட்சி பூசல் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒருமுறைகூட தன் துறை தவிர்த்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததே இல்லை.
சத்தமில்லாமல் களப்பணி 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எந்த தொகுதி என்று இன்னும் முடிவாகவில்லை. எனினும் அவர் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும் மணப்பாறை மற்றும் புதுக்கோட்டை விராலிமலை தொகுதி என இரண்டிலும் அரசியல் பணியை இப்பொழுதே துவக்கி விட்டார்.யாராவது முதலமைச்சர் வேட்பாளரா இருங்க என் தொகுதி தான் எனக்கு முக்கியம் என்று தனக்கே உரிய பாணியில் புது ரூட்டை பிடித்து இருக்கின்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.