குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின். இவர் இதற்கு முன் ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலும் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் குக் வித் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் அஸ்வின் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து நடித்த குட்டி பட்டாஸ் மியூசிக்கல் ஆல்பம் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய சிங்கிளின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘நமக்காக நாம மட்டும் தான் இருப்போம்’ என்ற கேப்ஷனுடன் ‘லோனர்’ ஆல்பத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .